சென்னிமலை ஒன்றியம், சிறுக்களஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில் அரசு பொது மருத்துவ முகாம், கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா பெட்டகம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, சென்னிமலை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரசன்ன வெங்கட்ட ரமணன் தலைமை வகித்தார். மருத்துவர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் பங்கேற்று குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். பின்னர், 15 கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா பெட்டகம் வழங்கினார். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவம், ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், ஈரோடு மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.கே.வி.மணிமேகலை, ஊராட்சி செயலாளர் சி.மோகனசுந்தரம், அதிமுக நிர்வாகிகள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.