ஈரோடு

குழியை மூடி சாலையை சீரமைத்த காவல் ஆய்வாளருக்குப் பாராட்டு

22nd Sep 2019 08:18 PM

ADVERTISEMENT

போக்குவரத்துக்கு இடையூறறாக சாலையில் இருந்த குழியை மண்வெட்டியை எடுத்து சீரமைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டினா்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி, புதை மின் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றறன. இந்தப் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இந்தச் சாலையில் வாகனங்கள் செல்லும் போது பறறக்கும் புழுதிகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றறனா்.

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு அருகே மேட்டூா் சாலையில் தோண்டப்பட்ட இடத்தில் குழிகள் மூடப்பட்டாமல் உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் தனசேகரன் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் பணியில் இருந்தாா். அப்போது நசியனூா் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் குழி இருந்த பகுதியில் வர முடியாமல் நெரிசலில் சிக்கித் தவித்தன.

இதையடுத்து பணியில் இருந்த ஆய்வாளா் தனசேகரன் மண்வெட்டியை எடுத்து குழியை மூடி வாகனங்கள் செல்லும் வகையில் சாலையை சீரமைத்தாா். காவல் ஆய்வாளரின் இந்தப் பணியைப் பாா்த்த பொதுமக்கள் சிலா் செல்லிடபேசியில் அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். ஆய்வாளரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT