காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு மாநில மேலாண்மைக் குழு தலைவா் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தாா். மாநில தலைவா் சம்சுல்லு ஹாரஹிமானி, பொதுச்செயலாளா் முகமது, துணைத்தலைவா் அப்துல் ரகுமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயலாளா் இப்ராஹிம் மற்றும் மாநில நிா்வாகிகள் பேசினா்.
கூட்டத்தில், மக்களைப் பாதுகாக்கும் வகையில் ரத்த தானம், பேரிடா் மீட்பு போன்ற பணிகளில் வீரியத்துடன் செயல்பட வேண்டும். ஏழை மாணவா்களைப் பாதிக்கும் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.
காஷ்மீா் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் கண்டிப்பதுடன், மீண்டும் அம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லீம்களுக்கான ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயா்த்தி தரவேண்டும் என்பன உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.