சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியர் சார்பில் உலக ஓசோன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை தலைமையாசிரியர் ரத்தினசபாபதி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் து.சிவசங்கர் வரவேற்றார். முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில் ஓசோன் படலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர் முழக்கம் எழுப்பியபடி சென்றனர்.
மேலும், மரங்கள் வளர்ப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்தும் ஊர்வலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேசிய மாணவர் படை அலுவலர் முருகேஷ், ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.