ஈரோடு

ஆதிநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

22nd Sep 2019 05:14 AM

ADVERTISEMENT


புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சென்னிமலை,  மேலப்பாளையத்தில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அலமேலு மங்கை-நாச்சியார் மங்கை சமேத ஆதிநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல, சென்னிமலை, காங்கேயம் சாலையில் உள்ள ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயில், சென்னிமலையை அடுத்த உப்பிலிபாளையத்தில் உள்ள அணிரங்க பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, பெருந்துறை, கோட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்டரமண பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது, ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்டரமண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், பெருந்துறையை அடுத்த தோட்டாணிசத்திரம் பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT