ஈரோடு

ஜம்பையில் ரூ. 9.20 லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்தேக்கத் தொட்டி

17th Sep 2019 07:45 AM

ADVERTISEMENT

ஜம்பை பேரூராட்சி, சின்னியம்பாளையத்தில் ரூ. 9.20 லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்தேக்கத் தொட்டி கட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. 
ஜம்பை பேரூராட்சி, 4 ஆவது வார்டு, சின்னியம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாகவும், தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி பவானி சட்டப் பேரவை உறுப்பினரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, குடிநீர் மேல்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 9.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, சின்னியம்பாளையத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்தேக்கத் தொட்டி கட்டும் பணியை அமைச்சர் கே.சி.கருப்பணன், பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் கே.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மா.செந்தில்குமரன் வரவேற்றார். 
இதில், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழில்சங்கச் செயலாளர் கே.ஆர்.ஜான், ஜம்பை பேரூர் செயலாளர் ராமசாமி, இளநிலை உதவியாளர் செல்வி, பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT