ஈரோடு

சாலை விபத்து: கைத்தறி வியாபாரி பலி

17th Sep 2019 07:46 AM

ADVERTISEMENT

புன்செய் புளியம்பட்டி அருகே நேரிட்ட சாலை விபத்தில் கைத்தறி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
புன்செய்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (45). கைத்தறி சேலை தயாரிப்பாளர். இவர், தனது இருசக்கர வாகனத்தில் மாதம்பாளையம் சாலை, கண்ணப்பர் மகால் பகுதியிலிருந்து தெற்கே மேட்டுப்பாளையம் சாலைக்குச் சென்றடையும் இணைப்புச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த கார் இவரது வாகனம் மீது மோதியதில் ரங்கராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் காயம்பட்டவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரங்கராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT