ஈரோடு

சென்னிமலையில் சுற்றித் திரிந்த மனநோயாளி மீட்பு

10th Sep 2019 06:50 AM

ADVERTISEMENT

சென்னிமலை பகுதியில் சுற்றித் திரிந்த மனநோயாளியை,  நம்மால் முடியும் நண்பா குழுவினர் மீட்டு சென்னை, அட்சயம் காப்பகத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.    
சென்னிமலை, ஊத்துக்குளி சாலையில் மலை அடிவாரத்தில் செலம்பகவுண்டன்பாளையம் உள்ளது. இங்கு, பழனி ஆண்டவர் கோயில் உள்ளது. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றித் திரிந்து வந்தார். இவர் பெயர் என்ன? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இவரைப் பாதுகாக்க செலம்பகவுண்டன்பாளையம் பகுதியில் செயல்படும் "நம்மால் முடியும் நண்பா' குழு ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு முயற்சிகளை எடுத்து, சென்னையில் செயல்படும் அட்சயம் அறக்கட்டளையின், யாசகர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தார். 
அந்தக் குழுவினர் செலம்பகவுண்டன்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்டு, அவருக்கு முடிவெட்டி, குளிக்க வைத்து, புது துணிகள் கொடுத்தனர். 
பின்னர், சென்னிமலை போலீஸாரிடம் முறையாக அனுமதி பெற்று அட்சயம் அறக்கட்டளை, யாசகர் மீட்புக் குழுவுடன் பாதுகாப்பாக "நம்மால் முடியும் நண்பா குழுவினர்' மனநலம் பாதிக்கப்பட்டவரை அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT