ஈரோடு

அரசுப் பள்ளியை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர்

10th Sep 2019 06:53 AM

ADVERTISEMENT

கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட இந்து முன்னணியினர் முயன்றதால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, விளையாட்டு ஆசிரியை மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த ராக்கி கயிறுகளை அவிழ்த்து வைத்துவிட்டு விளையாடச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்கள் தெரிவித்த தகவலையடுத்து, இந்து முன்னணி அமைப்பினர் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திங்கள்கிழமை முயன்றனர். பள்ளியை முற்றுகையிட முயன்றவர்களை கவுந்தப்பாடி போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது, விளையாடும்போது கயிறு இடைஞ்சலாக இருக்கும் என்று கருதி கயிற்றை அவிழ்த்து வைத்துவிட்டு விளையாட்டு முடிந்த பிறகு மீண்டும் கட்டிக்கொள்ளுமாறு மட்டுமே மாணவர்களை அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT