ஈரோடு

மொடக்குறிச்சியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

7th Sep 2019 07:07 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி தாலுக்காவில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி, அறச்சலூர், அவல்பூந்துறை, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், மொடக்குறிச்சி கரியகாளியம்மன் கோயில் திடலுக்கு ஊர்வலமாக வியாழக்கிழமை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி பொதுக் கூட்டம் மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விவேக்குமார் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாநகர மாவட்ட பேச்சாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை மொடக்குறிச்சி நால்ரோட்டிலிருந்து பாஜக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ரெயின்போ கணபதி துவக்கி வைத்தார். 
ஊர்வலமானது, மொடக்குறிச்சி, மானூர், முத்தாயிபாளையம், வேலம்பாளையம், கணபதிபாளையம் வழியாகச் சென்று மன்னாதம்பாளையம்  காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் 300 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர்  கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT