ஈரோடு

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 07:10 AM

ADVERTISEMENT

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஈரோட்டில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஈரோடு மின் பகிர்வான வட்டக் கிளை சார்பில், ஈரோடு மின் பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஜோதிமணி, சிஐடியூ மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், களப் பிரிவு, கணக்கீட்டு பிரிவுகளில் 40,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கேங்மேன் பதவியை ரத்து செய்து கள உதவியாளர் என்ற பெயரில் பணி நியமனம் செய்ய வேண்டும். மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க வேண்டும்.
பகுதி நேர ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க விசாகா கமிட்டி அடிப்படையில் பாலியல் புகார் கமிட்டி வட்ட வாரியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT