ஈரோடு

கண் தான விழிப்புணர்வுப் பேரணி

7th Sep 2019 07:06 AM

ADVERTISEMENT

தேசிய கண் தான விழிப்புணர்வு நாளையொட்டி, ஈரோட்டில் வாசவி கல்லூரி, அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தான விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஈரோடு கிளையின் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி, நசியனூர் சாலை வழியாகச் சென்று சம்பத் நகர் நூலகம் முன்பு முடிவடைந்தது. இதில், 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கண் தான விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இதில், மருத்துவர்கள் சந்திரமோகன், இளவரசு, மருத்துவமனை மேலாளர் லோகநாதன், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT