ஈரோடு

அமமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் நியமனம்

7th Sep 2019 07:05 AM

ADVERTISEMENT

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக குளுர் கூட்டுறவுச் சங்க துணைத் தலைவர் தங்கராஜை நியமனம் செய்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்தார். 
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் 19 மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர், மாநகர் மாவட்டத்தை மாற்றியமைத்து ஈரோடு மாநகர் மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதியும், புறநகர் மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பவானிசாகர் (தனி) ஆகிய தொகுதிகளாகவும் மாற்றியமைத்து, ஈரோடு மாநகர் 
மாவட்டச் செயலாளாராக  மொடக்குறிச்சி தொகுதி குளுர் கூட்டுறவுச் சங்க துணைத் தலைவராக இருக்கும் டி.தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT