ஈரோடு

ஸ்டவ் வெடித்ததில் பெண் சாவு

4th Sep 2019 07:14 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே ஸ்டவ் வெடித்ததில் வட மாநிலப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருந்து போதுராய் (25). இவரது மனைவி ஆஸ்டோமி மோண்டல் (22).  இவர்கள் இருவரும் பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.  
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஆஸ்டோமி மோண்டல் வழக்கம்போல வீட்டில் உணவு தயார் செய்ய பம்ப் ஸ்டவில் காற்று அடித்து பற்ற வைத்துள்ளார். அப்போது, ஸ்டவில் இருந்து மண்ணெண்ணெய் வெளியேறி தீப் பிடித்ததில் ஆஸ்டோமி உடலில் தீப் பற்றியுள்ளது. இதனைப் பார்த்த போதுராய் அவரைக்  காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவருடைய கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த அஸ்டோமி, பெருந்துறை குற்றவியல் நீதித் துறை நடுவர் கே.எஸ்.சபினாவிடம் வாக்குமூலம் அளித்தார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்டோமி மோண்டல் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  
     

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT