ஈரோடு

நந்தா பாலிடெக்னிக் மாணவர்கள்  சார்பில் குளம் தூர்வாரும் பணி

4th Sep 2019 07:10 AM

ADVERTISEMENT

ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் பசுமை இயக்கம், ஈரோடு நடுநகர் அரிமா சங்கம், ரிலையன்ஸ் மால் சார்பில் குளம் தூர்வாரப்பட்டது. 
ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகில் உள்ள பள்ளிபாளையம் குளத்தில் அண்மையில் நடைபெற்ற தூர்வாரும் பணியை நந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ரபீக் அகமது தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
ஈரோடு அரிமா சங்க பட்டயத் தலைவர் என்.முத்துசாமி, தலைவர் எம்.வெங்கட்ராமன்,  திட்ட இயக்குநர் எ.ஜெ.சரவணன்,  ரிலையன்ஸ் மால் மேலாளர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் பசுமை இயக்க மாணவர்கள் சுமார் 200க்கும்  மேற்பட்டோர், ஆசிரியர்கள் குளத்தை தூர்வாரியதோடு, அதன் கரைகளையும் தூய்மைப்படுத்தினர்.
தூர்வாரும் பணி முடிவடைந்த பிறகு 2 மாணவர்களுக்கு ஒரு விதை என்கிற முறையில் 100 பனை விதைகள் குளத்தின் கரைகளில் விதைக்கப்பட்டன. தூர்வாரும் பணியை மேற்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன், முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT