ஈரோடு

தடகளப் போட்டி: ஈங்கூர் யுனிக் பள்ளி சிறப்பிடம்

4th Sep 2019 07:10 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஐசிஎஸ்இ., ஐஎஸ்சி., பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி விகாஸா பள்ளி சார்பில் திருநெல்வேலி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவிகள் பங்கேற்று 3 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர்.
மேலும், தமிழக அளவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். இப்பள்ளி மாணவி ஸ்ருதி ராமசாமி 200, 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
இப்பள்ளி மாணவி சிற்பிகா ஜெகநாதன் 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், ஏ.எஸ்.வர்ஷா 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், டி.ரிதன்யா மும்முறை நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 
இப்போட்டியில், தங்கப் பதக்கம் பெற்ற ஸ்ருதி ராமசாமி, சிற்பி ஜெகநாதன் ஆகியோர் புணேவில் நடைபெறும் தேசிய தடகளப் போட்டிக்கு, தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்கின்றனர். 
வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளித் தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமையவள்ளி இளங்கோ,  இயக்குநர் அஸ்வின் இளங்கோ மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT