ஈரோடு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 13 பேர் தேர்வு

4th Sep 2019 07:12 AM

ADVERTISEMENT

மாநில அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. 
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதேபோல், மாநில அளவிலான நல்லாசிரியர் விருதான  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம்:
1. ம.பாலசுப்பிரமணியம், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, பி.கரட்டுப்பாளையம், கோபி. 2. பெ.ரெங்கநாயகி, தலைமை ஆசிரியை, சக்தி மேல்நிலைப் பள்ளி, நாச்சிமுத்துபுரம், அந்தியூர். 3. ந.மா.சாந்தி, தலைமை ஆசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளி, வேமாண்டம்பாளையம், நம்பியூர். 4. அ.கதிர்வேல், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, காஞ்சிக்கோவில். 5. கே.எஸ்.புருஷோத்தமன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பொலவக்காளிபாளையம், கோபி.
6. ஆ.வைரமூர்த்தி, தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கணபதிபாளையம், மொடக்குறிச்சி. 7. சி.பிரமிளா, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கருந்தேவன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி. 8. வெ.ராஜேஸ்வரி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெருந்துறை கிழக்கு. 9. ந.சித்ரா, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோடேபாளையம், பவானிசாகர். 10. பெ.உமாதேவி, தலைமை ஆசிரியை, மன்னாதம்பாளையம், நஞ்சை காளமங்கலம், மொடக்குறிச்சி.  11. இ.அமலநாத், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கொங்கர்பாளையம். 12. வி.சரஸ்வதி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பள்ளிபாளையம், நசியனூர். 13. சு.வைஜெயந்தி, முதல்வர், பி.கே.பி.சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கல்யாணிபுரம்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெறுகின்றனர். மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்று ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களுக்கு ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி பாராட்டு தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT