ஈரோடு

சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை

4th Sep 2019 07:10 AM

ADVERTISEMENT

பெருந்துறை அமைதிப் பூங்காவில் (நவீன எரிவாயு மயானத்தில் ) பணியாற்றி சாலை விபத்தில் உயிரிழந்த ஆபரேட்டர் பழனிசாமியின் குடும்பத்தாரிடம் விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
கடந்த 2019 மார்ச் 12 ஆம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்த ஆபரேட்டர் பழனிசாமியின் குடும்பத்தாரிடம் விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை ஈரோடு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் டி.அப்பாஸ் செவ்வாய்க்கிழமை  வழங்கினார்.
அப்போது, அமைதிப் பூங்கா அறக்கட்டளைத் தலைவர் டி.என்.சென்னியப்பன், செயலாளர் சி.செளந்தரராஜன், இணைச் செயலாளர் பல்லவி பரமசிவன், இயக்குநர் முருகபூபதி, மேலாளர் மோகன், முகவர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT