ஈரோடு

சாலையின் குறுக்கே மரம் முறிந்து  விழுந்து போக்குவரத்து பாதிப்பு

4th Sep 2019 07:11 AM

ADVERTISEMENT

பவானிசாகர் அருகே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் செல்லும் சாலையில் பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறை கிராமத்தில் சாலையோரத்தில் இருந்த மரம் செவ்வாய்க்கிழமை முறிந்து விழுந்தது.
இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நால்ரோடு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  பவானிசாகர் போலீஸார் போக்குவரத்தை சீர்படுத்தினர். இதையடுத்து, பொதுமக்களின் உதவியுடன் மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதன் காரணமாக சத்தியமங்கலம்-பவானிசாகர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT