ஈரோடு

கள் இறக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டம்

4th Sep 2019 07:14 AM

ADVERTISEMENT

கள் இறக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார். 
தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமை வகித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் கள் இறக்கியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத செயலாகும். இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற  இருக்கும் இடைத்தேர்தலில் கள் இயக்கம் போட்டியிடும். இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள் கள் போதைப் பொருள் என நிரூபித்தால் போட்டியில் இருந்து விலகிக் கொள்வோம். மேலும், கள் போதைப் பொருள் என நிரூபிப்பவருக்கு ரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும். கள் இறக்கும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளோம் என்றார். 
இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு மக்கள் இயக்கத் தலைவர் முத்துசாமி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT