ஈரோடு

ஈமு கோழி நிறுவன பறிமுதல் பொருள்கள் செப்டம்பர் 17இல் ஏலம்

4th Sep 2019 07:58 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த ஈமு கோழி நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட பொருள்கள் செம்டம்பர் 17 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், விஜயமங்கலம் ராஜராஜேஸ்வரி பவுல்டரி, பெருந்துறை ராஜராஜேஸ்வரி பவுல்டரி, பெருந்துறை ஜி.ஒன். ஈமு பார்ம்ஸ், கோவை குயின் ஈமு பாம்ஸ், பெருந்துறை குயின் ஈமு பார்ம்ஸ், நாமக்கல் கொங்குநாடு ஈமு பவுல்டரி பார்ம்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறைகேடு புகாரால் இடைமுடக்கம் செய்யப்பட்டது.
அவற்றின் சொத்துக்கள் கோவை டான்பிட் நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்து ஏலம் விடப்படுகிறது.
அதன்படி அந்த நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துக்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு h‌t‌t‌p://‌w‌w‌w.‌e‌r‌o‌d‌e.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருந்து நிபந்தனை மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அசையா சொத்துக்கள், நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.25,000, இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5,000 டி.டி.யாக C‌o‌m‌p‌e‌t‌e‌n‌t A‌u‌t‌h‌o‌r‌i‌t‌y a‌n‌d D‌i‌s‌t‌r‌i​c‌t R‌e‌v‌e‌n‌u‌e O‌f‌f‌i​c‌e‌r, E‌r‌o‌d‌e என்ற பெயரில் பெற வேண்டும்.
இதனை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து செப்டம்பர் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT