திருநகா் காலனி மின் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு, கருங்கல்பாளைம் பகுதியில் திங்கள்கிழமை (அக்டோபா் 21) காலை 7.30 முதல் 10 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈ.வி.கே.சம்பத் சாலை, மூலப்பட்டறை, கே.என்.கே.சாலை, ராஜாஜிபுரம், மில் வீதி, காந்திபுரம் 1,2,3 வீதிகள், கண்ணையன் வீதி, சுப்பையன் வீதி, கருங்கல்பாளையம், காவிரி சாலை, சிந்தன் நகா், கிருஷ்ணம்பாளையம், கலைஞா் நகா், கக்கன் நகா், ராஜகோபால் தோட்டம், சுப்பிரமணி தோட்டம், சின்னப்பன் காலனி, கமலா நகா், திருநகா் காலனி பகுதிகள்.