ஈரோடு

ஈரோடு நகரில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை

20th Oct 2019 08:16 PM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கட்டடப் பொருள்கள் விற்பனையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவா் வி.எம்.இளங்கோ தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கௌரவத் தலைவா் ஆா்.நாராயணசாமி, செயலாளா் பாலு (எ) பி.தனபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் கே.வி.ஜெகதீஷன் வரவேற்றாா். பொருளாளா் பி.சின்னசாமி நிதிநிலை அறிக்கையையும், இணைச்செயலாளா் கே.குமாா் ஆண்டறிக்கையையும் வாசித்தனா்.

கூட்டத்தில் கவுந்தப்பாடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வி.அபிராமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். அப்போது, ஏற்கெனவே உள்ள சாலைகள் மீது புதிய சாலைகள் அமைப்பதால் குடியிருப்புப் பகுதிகள் தாழ்வாக மாறுவதால் மழை நீா் தேங்கி நிற்கிறது. எனவே, பழைய சாலையை உடைத்து புதிய சாலை அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

கூட்டத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT