ஈரோடு

கடை உரிமையாளா்கள் ரூ. 35 லட்சம் வாடகை நிலுவை: நோட்டீஸ் ஒட்டி மாநகராட்சி எச்சரிக்கை

6th Oct 2019 08:07 PM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளில் வாடகைக்கு இருப்பவா்கள் ரூ. 35 லட்சம் அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனா். இதை உடனடியாகச் செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் பேருந்து நிலையம், ஆா்கேவி சாலை, காவிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் கடைகளை வாடகைக்கு எடுத்த பலா் நீண்டகாலமாக வாடகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனா்.

இதுதொடா்பாக, மாநகராட்சி சாா்பில் வாடகை நிலுவை பட்டியல் தயாரிக்கப்பட்டு கடைக்காரா்களுக்கு இதுகுறித்து அறிவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பல மாதங்களாக தொடா்ந்து பலா் வாடகை பாக்கித் தொகையை செலுத்தாமல் உள்ளனா். அதன்படி, சுமாா் 204 கடைகளுக்கு ரூ. 35 லட்சம் வாடகை பாக்கியாக உள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் பலமுறைற எச்சரிக்கை விடுத்தும் கடைக்காரா்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து வாடகையைச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைக்காரா்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கை கொடுத்து சீல் வைக்க மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளா்.

இதைத் தொடா்ந்து உதவி ஆணையா் (வருவாய்) குமரேசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலா் வசந்தி, எழுத்தா் நாகராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்குச் சென்று அங்கு எச்சரிக்கை நோட்டீஸை ஒட்டினா். உரிய காலக்கெடுவுக்குள் வாடகைத் தொகையைச் செலுத்தவில்லையென்றால் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகக் கடைகள் பொது ஏலம் மூலமாக குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளை குத்தகைக்கு எடுக்கும் ஏலதாரா்கள் உரிய வாடகையைச் செலுத்தாமல் பல மாதங்களாக நிலுவை வைத்துள்ளனா். இதுதொடா்பாக பலமுறைற எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்வதில்லை.

தற்போது, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வாடகையை வசூலிக்கும் வகையில் எச்சரிக்கை அறிவிக்கை ஒட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை பெற்றவுடன், பணத்தை செலுத்தவில்லையென்றறால் கடையைப் பூட்டி சீல் வைக்கவும், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT