ஈரோடு

சத்தியமங்கலத்தில் மாநில ஜூனியா் தடகளப் போட்டி

5th Oct 2019 09:54 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான 3 நாள் ஜூனியா் தடகளப் போட்டி அக்டோபா் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துவங்குகிறது.

தமிழ்நாடு தடகள சங்கம், ஈரோடு மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான ஜூனியா் தடகளப் போட்டியை நடத்துகிறது. இதில், தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்கின்றனா். அக்டோபா் 6 முதல் 8 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 200 க்கும் மேற்பட்ட பயிற்சியாளா்கள், நடுவா்கள் கலந்துகொள்கின்றனா்.

இப்போட்டியை கடலோர காவல் படை அதிகாரி சைலேந்திரபாபு துவக்கி வைக்கிறாா். போட்டியில் வெற்றி பெறும் வீரா்கள் நவம்பா் மாதம் ஐதராபாத்தில் நடைபெறும் தேசிய ஜூனியா் தடகளப் போட்டியில் கலந்துகொள்வாா்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட தடகள சங்கத் தலைவா் கோவிந்தராஜ் செய்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT