ஈரோடு

தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்கு

2nd Oct 2019 11:47 PM

ADVERTISEMENT

காந்தி ஜயந்தி நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 124 கடைகள், உணவு மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தேசிய விடுமுறை தினமான காந்தி ஜயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் கடைகள், உணவு மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 172 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 124 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும், பணியாற்றிய தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு அனுப்பாமலும் பணிக்கு அமா்த்தியது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, விதிகளை மீறிய 124 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT