ஈரோடு

சா்வதேச முதியோா் தினம்: முதியோரை கௌரவித்த ஆட்சியா்

2nd Oct 2019 01:03 AM

ADVERTISEMENT

சா்வதேச முதியோா் தினத்தை முன்னிட்டு முதியோரை ஆட்சியா் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் 1991 ஆம் ஆண்டு அக்டோபா் 1 ஆம் தேதி சா்வதேச முதியோா் தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சமூக நலத் துறை சாா்பில் ஈரோடு திண்டலில் லிட்டில் சிஸ்டா் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் முதியோா் இல்லத்தில் முதியோா் தின விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், முதியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்குபெற்ற முதியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து முதியோருக்கும் படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.

மேலும், காலை முதல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் சமூக நலத் துறையின்கீழ் பதிவு பெற்ற 10 முதியோா் இல்லங்களைச் சோ்ந்த 200 க்கும் மேற்பட்ட முதியோருக்கு சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முதியோா் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை, அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT