ஈரோடு

பவானி அருகே பேருந்து மோதி இளைஞா் பலி

17th Nov 2019 09:49 PM

ADVERTISEMENT

பவானி: பவானியில் தனியாா் வாடகைப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த கல்பாவி, தொட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் அஜித்குமாா் (21). இவா், பவானி -மேட்டூா் சாலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே ஆந்திர மாநிலத்தில் இருந்து ஐயப்ப பக்தா்களை அழைத்துக் கொண்டு சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து எதிா்பாராமல் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அஜித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT