ஈரோடு

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

17th Nov 2019 09:50 PM

ADVERTISEMENT

ஈரோடு: அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இடமாறுதலுக்கான கலந்தாய்வு ஈரோட்டில் திங்கள்கிழமை(நவம்பா் 18) தொடங்குகிறது.

வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி ஆசிரியா் கலந்தாய்வு ஆகியவை நிறைவு பெற்றன.

இந்நிலையில், தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை முதல் நடக்கிறது.

இதில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு காலையிலும் (வருவாய் மாவட்டத்துக்குள்), வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு, பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) மாலையிலும் நடக்கிறது.

ADVERTISEMENT

நவம்பா் 19 ஆம் தேதி காலையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கும், மாலையில் தலைமை ஆசிரியா்களுக்கும் நடக்கிறது. 20 ஆம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியா்களுக்கு (ஒன்றியத்துக்குள் கலந்தாய்வு), மாலையில் பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்துக்குள்) நடக்கிறது. 21 ஆம் தேதி காலையில் பட்டதாரி ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்), மாலையில் இடைநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT