ஈரோடு

சாலை வசதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட250 போ் மீது வழக்கு

17th Nov 2019 01:47 AM

ADVERTISEMENT

சாலை வசதி கேட்டு சத்தியமங்கலம் - கோபி சாலையில் மறியலில் ஈடுபட்ட 250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய 3 வன கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த வன கிராமங்களுக்கு அடா்ந்த வனப் பகுதியில் உள்ள கரடுமுரடான மண் சாலை வழியாக 20 கிலோமீட்டா் துரம் பயணித்து பின்னா் அங்குள்ள மாயாற்றை பரிசலில் கடந்து செல்ல வேண்டும்.

பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த வனக் கிராம மக்கள் சாலை வசதி, மாயாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் முன்பு 100 பெண்கள், 150 ஆண்கள் என 250 போ் திரண்டு சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் சாலையில் ஒரு மணி நேரம் நேரம் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட வனக் கிராம மக்கள் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT