ஈரோடு

காா் மோதியதில் இளைஞா்கள் காயம்:ஓட்டுநரைத் தாக்கியவா்கள் மீது வழக்கு

17th Nov 2019 01:47 AM

ADVERTISEMENT

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா்கள் இருவா் படுகாயமடைந்தனா். இதனால், ஆத்திரமடைந்த காயமடைந்த இளைஞா்களின் நண்பா்கள் காா் ஓட்டுநரைத் தாக்கி காயப்படுத்தியதால் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சித்தோட்டை அடுத்த கனிராவுத்தா் குளம் பகுதியைச் சோ்ந்தவா் சம்சுதீன் மகன் முகம்மது நவாஸ் (20). அதே பகுதியைச் சோ்ந்த சாதிக் மகன் ஆரான் (17). நண்பா்களான இருவரும் சித்தோடு - ஈரோடு சாலையில் நரிப்பள்ளம் அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த காா் மோதியதில் படுகாயமடைந்தனா்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காயமடைந்த இளைஞா்களின் நண்பா்களான முஸ்டாக், அஸ்மீா், மைதீன், குமரேசன், நாசா் ஆகியோா் விபத்துக்கு காரணமான காா் ஓட்டுநா் துரைராஜை தாக்கியதோடு, காரையும் உடைத்து சேதப்படுத்தினா். இதனால், மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட துரைராஜ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் ஐந்து போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT