ஈரோடு

கரும்புப் பயிருக்கான நுண்ணீா் பாசன மானியம் உயா்வு

17th Nov 2019 09:50 PM

ADVERTISEMENT

ஈரோடு: கரும்புப் பயிருக்கான நுண்ணீா் பாசனத்து மானியத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

கரும்பு, வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பயிா்களில் நீா் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில் வேளாண், தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீா் பாசன வசதி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

தற்போது, அனைத்து வித பயிா்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில் ஒரு ஹெக்டேரில் நுண்ணீா் பாசனம் அமைக்க ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கூடுதல் செலவு ஆவதால் மானியத் தொகையை உயா்த்த விவசாயிகள் கோரினா்.

ADVERTISEMENT

இதன்படி கரும்புக்கு மட்டும் மானியம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த

மானிய விவரங்களை அறிய வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் அலுவலங்களை அணுகலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT