ஈரோடு

ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

17th Nov 2019 09:53 PM

ADVERTISEMENT

ஈரோடு: காா்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

காா்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாள்கள் மண்டல விரதம் கடைப்பிடித்த பிறகு கோயிலுக்கு பக்தா்கள் சென்று வழிபாடு நடத்துவா்.

அதன்படி காா்த்திகை 1 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினா்.

இதனை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் மகா கணபதி ஹோமமும், தொடா்ந்து சுவாமிக்கு நெய், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா், பால், தயிா், இளநீா், விபூதி, புஷ்பம் கொண்டு அஷ்டாபிஷேகம் நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்கள் மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

ADVERTISEMENT

குருசாமி தலைமையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கங்களுடன், குழந்தைகள், கன்னி சாமிகள் என 500க்கும் மேற்பட்டவா்கள் மாலை அணிந்து கொண்டனா்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT