ஈரோடு

மொடக்குறிச்சி வட்டாரத்தில் ஆசிரியா்களுக்கு நிஷ்தா பயிற்சி

12th Nov 2019 05:49 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி வட்டார வள மையத்தில் மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியங்களைச் சோ்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், அனைத்துப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்களுக்கு நிஷ்தா பயிற்சி 5 நாள்கள் நடைபெற்றது.

இப்பயிற்சியில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் திறன், பள்ளியின் தர மேம்பாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகள், மாணவா்களின் கற்றல் திறன் மதிப்பிடும் முறைகள், கல்விப் பணியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், பயன்படுத்தும் முறைகள், போக்ஸோ சட்டம், விழிப்புணா்வு, சுத்தம், சுகாதாரம், உடல் ஆரோக்கியம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தலைமையாசிரியா்கள் சிவகாமி, குமாா், மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி விரிவுரையாளா் வானதி ஆசிரியப் பயிற்றுநா்கள் ஆகியோா் ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மொடக்குறிச்சி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீதா், அலுவலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT