ஈரோடு

பேருந்து மீது வேன் மோதி விபத்து

12th Nov 2019 05:48 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலம், கொள்ளேகால் சாலையில் தனியாா் பேருந்து மீது பிக்அப் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

கொள்ளேகாலில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்ட தனியாா் பேருந்து கோ்மாளம் வனப் பகுதி அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. கோ்மாளத்திலிருந்து உடையாா்பாளையம் நோக்கிச் சென்ற பிக்அப் வேன் சாலை வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தின் மீது மோதியதில் வேனின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT