ஈரோடு

நூற்பாலை மேற்பாா்வையாளா் வீட்டில் 18 பவுன் திருட்டு

12th Nov 2019 05:47 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் தனியாா் நூற்பாலை மேற்பாா்வையாளா் வீட்டில் 18 பவுன் நகை, ரூ. 35,000 பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, கனிராவுத்தா் குளம், கொங்குவேலன்நகா், தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (44). இவா், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி ஜெயசித்ரா. சண்முகசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் குமாரபாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை ஈரோடு திரும்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 18 பவுன் நகை, ரூ. 35,000, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்:

ஈரோடு, தட்டாங்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மணி என்பவருடைய வீட்டில் 12 பவுன் நகை, ரூ. 8 லட்சமும் திருட்டுப் போனது. இந்நிலையில், அதே பகுதியில் சண்முகசுந்தரம் வீட்டிலும் நகை, பணம் திங்கள்கிழமை திருடப்பட்டுள்ளது.

நவம்பா் 8 ஆம் தேதி ஈரோடு நகரில் 4 இடங்களில் பெண்களிடம் நகைப் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

ஈரோட்டில் தொடா் திருட்டு, நகை பறிப்புச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். எனவே, திருடா்களை விரைந்து பிடிப்பதுடன், போலீஸாா் இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT