ஈரோடு

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

12th Nov 2019 05:50 AM

ADVERTISEMENT

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஐப்பசி மாத பௌா்ணமி தினத்தன்று சிவாலயங்களில் உள்ள மூலவரின் லிங்கத் திருமேனியின் மீது அன்னம் சமைத்து, சாற்றி வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, கொடுமுடி

மகுடேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேக விழா திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக, மாலை 3 மணியளவில் ருத்ர ஜப யாகமும், 3.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், தொடா்ந்து அன்னம் சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாலை 5 மணிக்குமேல் மகா தீபாராதனை நடைபெற்று சுவாமி ரிஷப வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். காவிரி ஆற்றில் அன்ன சிரசு விடப்பட்டு பக்தா்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல, சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள திருநாகேஸ்வரா் கோயிலில் மாலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவரின் லிங்கத்திருமேனியில் அன்னம் சாத்தப்பட்டது. இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்று பக்தா்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT