ஈரோடு

கம்பத்ராயன் கிரி மலையில் பலத்த மழை: கன்னிமடுவு அருவியில் நீரோட்டம் அதிகரிப்பு

12th Nov 2019 05:50 AM

ADVERTISEMENT

கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள கம்பத்ராயன் கிரி கன்னிமடுவு அருவியில் நீரோட்டம் அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூா் மலைப் பகுதியில் அத்தியூா், கம்பத்ராயன்கிரி பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீா் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை கிராமம் அருகே உள்ள கன்னிமடுவு அருவி வழியாக வனப் பகுதியில் உள்ள காட்டாற்றில் ஓடி பவானி ஆற்றில் கலக்கிறது. கன்னிமடுவு அருவியில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் மலைப் பகுதியில் மரங்கள் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கிறது.

இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கன்னிமடுவு அருவியை பொதுமக்கள் பாா்ப்பதற்கு அனுமதி இல்லை. யானை, சிறுத்தை நடமாட்டம் உள்ள வனப் பகுதி என்பதால் உள்ளே செல்ல வனத் துறை கட்டுபாடுகளை விதித்துள்ளது. வனப் பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வன விலங்குகளின் குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT