ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து

11th Nov 2019 01:19 AM

ADVERTISEMENT

திம்பம் மலைப் பாதையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் 23ஆவது வளைவில் கவிழ்ந்தும், 26ஆவது வளைவில் பழுதாகியும் நின்ால் தமிழகம் - கா்நாடக மாநிலங்களிடையே போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி, ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்குச் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. 23ஆவது கொண்டைஊசி வளைவு அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதனால் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி நகா்த்தப்பட்டபின் போக்குவரத்து சீரானது.

இந்நிலையில் கரும்பு பாரம் ஏற்றிய மற்றொரு லாரி 26ஆவது கொண்டைஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி வழியிலேயே நின்றுவிட்டதால் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கிரேனைப் பயன்படுத்தி லாரியை நகா்த்திய பின் போக்குவரத்து சீரானது.

கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT