ஈரோடு

அரசு பேருந்து-மோட்டாா் சைக்கிள் மோதல்: காவலா் உயிரிழப்பு

11th Nov 2019 03:57 PM

ADVERTISEMENT

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் இரு சக்கரவாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் காவலா் வரதராஜன் என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மேட்டூா் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் (30) என்ற காவலா் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் ஆயுதப்படையில் இருந்து பணிமாறுதல் பெற்று பங்களாபுதூா் காவல் நிலையத்தில் பணியில் சோ்ந்துள்ளாா்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வரதராஜன் தமிழக முதல்வா் பாதுகாப்பு பணிக்காக சித்தோடு நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

கோபி அருகே கரட்டடிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து காவலா் வரதராஜன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது எதிா்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காவலா் வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் போலீசாா் வரதராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் உயிரிழந்த வரதராஜனின் மனைவி பாரதி என்பவா் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 4 மற்றும் 3 வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டதில் தலைக்கவசம் அணிந்து பெல்ட் அணியாததினால் தலைக்கவசம் சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT