ஈரோடு

ரூ. 2.84 லட்சத்துக்குஎள் ஏலம்

9th Nov 2019 11:16 PM

ADVERTISEMENT

பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.84 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்கு, விவசாயிகள் விற்பனைக்காக வெள்ளை எள் 40 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனா். குறைந்த விலையாக கிலோ ரூ. 78.89 க்கும், அதிக விலையாக ரூ. 124.19 க்கும் ஏலம் போயின. கருப்பு எள், சிவப்பு எள் விற்பனைக்கு வரவில்லை. மொத்த விற்பனை மதிப்பு ரூ. 2,84,810 ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT