ஈரோடு

பவானியில் முதல்வருக்கு வரவேற்பு

9th Nov 2019 11:22 PM

ADVERTISEMENT

பவானி: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பவானியில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோட்டில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சேலத்திலிருந்து பவானி வழியாக காரில் சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, பவானியில் அந்தியூா் - மேட்டூா் பிரிவில் ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இதில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினா் கே.தட்சிணாமூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT