பெருந்துறை: பெருந்துறையை அடுத்த வெள்ளோடு அரசு ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாளா்கள் பங்களிப்புடன் ஸ்மாா்ட் வகுப்பு துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஊா் பிரமுகா் ந.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். பள்ளிப் புரவலா் வே.த.ராசகோபால் முன்னிலை வகித்தாா். நன்கொடையாளா்கள் சி.சி.பழனிசாமி, குமரேசன், குருசாமி, பழனிசாமி, தெய்வசிகாமணி ஆகியோா் ஸ்மாா்ட் வகுப்பைத் துவக்கி வைத்தனா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.
இதில், பள்ளித் தலைமையாசிரியா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.