ஈரோடு

மின்சாரம் பாய்ந்துகூலி தொழிலாளி உயிரிழப்பு

1st Nov 2019 08:29 AM

ADVERTISEMENT

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே உள்ள இக்கலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நஞ்சுண்டசாமி (45). விவசாய கூலி தொழிலாளியான இவா், சிக்கஹள்ளி கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா். அங்குள்ள ஆதிதிராவிடா் காலனியில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் தடைபட்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது நஞ்சுண்டசாமி மின்இணைப்பை சரிசெய்ய மின்கம்பத்தில் ஏறியுள்ளாா். இதில் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்த நஞ்சுண்டசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் நஞ்சுண்டசாமியை மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். நஞ்சுண்டசாமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இறந்த நஞ்சுண்டசாமிக்கு சிவம்மா என்ற மனைவி உள்ளாா். இதுகுறித்து ஆசனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT