கொடுமுடி அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள தளுவம்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த்-முத்தழகி தம்பதியின் மகள் நிதா்ஷனா (7). இவா் இங்குள்ள தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் கரூா்-ஈரோடு சாலையைக் கடந்து மளிகைக் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். அப்போது செங்கல் ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கிச் சென்ற டிப்பா் லாரி சிறுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கொடுமுடி காவல் துறையினா் குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.