"விசைத்தறி தொழில் ஆர்வத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும்'

விசைத்தறி தொழிலுக்கு இளைஞர்கள் வருவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என கோவை மத்திய மண்டல

விசைத்தறி தொழிலுக்கு இளைஞர்கள் வருவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என கோவை மத்திய மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக துணை இயக்குநர் எம். பாலசுப்பிரமணியம் பேசினார். 
ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நசியனூர் சாலை நாராயணவலசில் நேரடி ஆயத்த ஆடை விற்பனையக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். 
இதில், எம்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்துப் பேசியதாவது:
விசைத்தறியாளர்கள் காடா துணியை உற்பத்தி செய்து அதை ஆயத்த ஆடைகளாக்கி விற்பனை செய்வது அடுத்த கட்ட முயற்சி. ஒரு சங்கம் சார்பில் அவர்களது உறுப்பினர்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது என்பது வரவேற்கத்தக்கது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வைத்து விற்காமல் ஆன்லைன், மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் போன்றவைகளிலும் இணைந்தும் பிற பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து விற்பனையை அதிகரிக்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு இளைஞர்கள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது உள்ளவர்களுடன் இத்தொழில் முடிந்துவிடும் என்ற நிலையை மாற்ற வேண்டும். விசைத்தறியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள இளைஞர்களை இத்தொழிலுடன் இணைந்த ஆயத்த ஆடைகள், பிறவகை துணிகள், பெரிய அளவிலான ஆர்டர்களை பெற்று செயல்படுத்தும் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். இடைத்தரகர்கள் இன்றி உற்பத்தியாளர்களே நேரடியாக இத்தொழிலில் ஈடுபடும்போது கூடுதல் லாபமும் கிடைக்கும் என்றார்.
மத்திய கலால் துறை உதவி ஆணையர் வி.நடராஜன் பேசியது:
சங்க உறுப்பினர்களின் உற்பத்தி பொருள்களை இணையதளம் மூலம் விற்பதற்கான சந்தையை ஏற்படுத்த வேண்டும். டெக்ஸ்வேலி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து விரிவாக்கம் செய்யவேண்டும் என்றார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கே.ராஜு, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் தலைவர் டி.ஜெகதீசன், பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் அசோகன், ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com