பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்பெருந்துறை கொங்கு பள்ளி 

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 32 ஆம் ஆண்டாக 100 % தேர்ச்சி பெற்றுள்ளது.

32ஆம் ஆண்டாக 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 32 ஆம் ஆண்டாக 100 % தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் முதல் மதிப்பெண் 500-க்கு, 492, இரண்டாவதாக 488, மூன்றாம் மதிப்பெண் 485 என மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். 475 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 51 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 120 பேரும் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 3 பேரும், அறிவியலில் ஒருவரும், கணிதத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
 தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவர்கள், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் ஆகியோரை, பள்ளியின் தலைவர் ஜி.யசோதரன், தாளாளர் டி.என்.சென்னியப்பன், துணைத் தலைவர் எஸ்.குமாரசாமி, பொருளாளர் பி.ஆர்.சுப்பிரமணியன், இணைச் செயலாளர் கே.பி.முத்துராமலிங்கம், நிர்வாகக்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.


ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தா பள்ளி 100% தேர்ச்சி
பெருந்துறை ஸ்ரீஸ்வாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மாணவ மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
இப்பள்ளி மாணவர்கள் 500-க்கு 485, 479, 478 என மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒரு மாணவி சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள்  பெற்றுள்ளார். 
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை, பள்ளித் தலைவர் சின்னஸ்வாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் மாணிக்கமூர்த்தி, முதல்வர் சுப்பிரமணியன், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

ஐஐடி, ஜேஇஇ தேர்வில் கோபி பாரதி  வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
ஐஐடி, ஜேஇஇ தேர்வில் கோபி பாரதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
 இப்பள்ளியில் மார்ச் மாதம் மேல்நிலை தேர்வு எழுதிய மாணவர்கள் 5 பேர் 500-க்கு 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். 11 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ஐஐடி, ஜேஇஇ தேர்வில் இப்பள்ளி மாணவர் அஷ்ரப் 93.25 சதவீத மதிப்பெண்களும், மாணவர் சாகர் 87.26 சதவீத மதிப்பெண்களும், மாணவி ஷஜனி 83.71 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 
சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் பி.ஆர்.வேலுமணி, முதல்வர் அமுதம் வேலுமணி ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com