ஈரோடு

ரூ.85.71 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

31st Jul 2019 06:55 AM

ADVERTISEMENT

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 85.71 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இங்கு, 56,138 தேங்காய்கள், சிறியவை ரூ.5.30 முதல் பெரியவை ரூ.14 வரையில் ரூ.4,65,616-க்கும், 109 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ.77.06 முதல் ரூ.90.49 வரையில் ரூ.3,54,809-க்கும், 8 மூட்டைகள் எள், கிலோ ரூ.106.69 முதல் ரூ.114.69 வரையில் ரூ.51,185-க்கும் ஏலம் போனது. மேலும், 4,000 மூட்டைகள் பருத்தி, 1,400 குவிண்டால், கிலோ ரூ.52.19 முதல் ரூ.59.79 வரையில் ரூ.77,00,000-க்கு விற்பனையானது. மொத்தம்  4117 மூட்டைகள், 1821.07 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.85,71,610-க்கு விற்பனையாயின.

ADVERTISEMENT
ADVERTISEMENT