ஈரோடு

கிணற்றில் விழுந்து விவசாயி சாவு

31st Jul 2019 06:56 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார். 
பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம், கம்புளியம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி (64). இவருக்கு சொந்தமான தோட்டத்தில்  60 அடி ஆழத்தில் திறந்த வெளி கிணறு உள்ளது. அதில், 5 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில்,  முத்துசாமி, கிணற்று ஓரத்தில் உள்ள வேப்ப மரத்தில் திங்கள்கிழமை மாலை வேப்பங்குச்சியை ஒடித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். 
தகவலறிந்து வந்த, பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இருந்து முத்துசாமியின் உடலை மீட்டனர். இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT