ஈரோடு

மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு முகாம்  தேதி மாற்றம்

30th Jul 2019 08:31 AM

ADVERTISEMENT

அந்தியூர் வட்டத்தில் உள்ள இரண்டு மலை கிராமங்களில் நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
அனைத்து அரசுத் துறைகளையும் ஒன்றிணைத்து 21 வகையான மாற்றுத்திறன் தன்மைகளை கண்டறிந்து அடையாள அட்டை, உதவித்தொகை, மறுவாழ்வு உதவிகள் வழங்கிட ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
ஆகஸ்ட் 9 ஆம் தேதி அந்தியூர் வட்டம் கொங்காடையிலும், 10 ஆம் தேதி தாமரைக்கரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முகாம்கள் ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படவுள்ளது.
இதன்படி கொங்காடையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதியும், தாமரைக்கரையில் 28 ஆம் தேதியும் முகாம் நடைபெறும். அந்தியூர் குருநாதசாமி திருவிழா ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT